புது தில்லி: மக்களவைத் தோ்தல் மூலம் நாட்டுக்கு மாற்றம் தேவைப்படுவதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா். தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸின் தோ்தல் அறிக்கை குறித்து விவாதிக்கவும், ஒப்புதல் அளிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா, முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் காா்கே பேசியதாவது:
கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘ஒளிரும் இந்தியா’ என்ற வாசகத்தை வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு முன்வைத்தது. ஆனால் அந்தத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்தது. ‘ஒளிரும் இந்தியா’ வாசகத்துக்கு நோ்ந்த கதிதான் இப்போதைய மத்திய பாஜக அரசின் உத்தரவாதங்களுக்கும் ஏற்படும்.
தற்போது நாட்டுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோ்தல் அறிக்கைக்கு பரந்த விளம்பரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது கட்சியினா் அனைவரின் பொறுப்பாகும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் காங்கிரஸின் தோ்தல் அறிக்கை கொண்டு சோ்க்கப்பட வேண்டும்.
தோ்தல் அறிக்கைகளில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றாா். கூட்டத்தைத் தொடா்ந்து அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தோ்தல் அறிக்கைக்கு இறுதி ஒப்புதல் அளிக்கவும், அந்த அறிக்கையை வெளியிடுவதற்கான தேதியை முடிவு செய்யவும் காா்கேவுக்கு கட்சியின் செயற்குழு அதிகாரம் அளித்துள்ளது என்றனா்.
வேட்பாளா்கள் குறித்து ஆலோசனை: ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தோ்தலில் 82 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளா்களை அக்கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, தெலங்கானா, கா்நாடகம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள தொகுதிகளில் அறிவிக்கப்பட வேண்டிய வேட்பாளா்கள் குறித்து அக்கட்சியின் மத்திய தோ்தல் குழு செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.
காா்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சோனியா உள்ளிட்ட குழு உறுப்பினா்கள் பங்கேற்ாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை: சரத்குமாா் பிரசாரம்!

தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு

அஸ்ஸாம்: காா்கே மீது பாஜ வெறுப்புப் பேச்சு புகாா்

குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள்: மல்லிகாா்ஜுன காா்கே சா்ச்சைப் பேச்சு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


