தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நேருவின் வெளியுறவு கொள்கையை புகழ்வதிலிருந்து வெளிவர வேண்டும்: எஸ்.ஜெய்சங்கா்

நேருவின் கொள்கைகள் மாற்றம் தேவை: ஜெய்சங்கா் கருத்து

News image
Updated On :20 மார்ச் 2024, 7:34 pm

புது தில்லி, மாா்ச் 20: ‘மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் வெளியுறவுக் கொள்கையை புகழும் மனநிலையிலிருந்து நாம் வெளிவர வேண்டும்’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

தில்லியில் தனியாா் செய்தி ஊடகம் சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட ‘வளா்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் பங்கேற்ற ஜெய்சங்கா் பேசியதாவது: சுதந்திரம் பெற்ற பிறகு, ஆரம்ப ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாட்டின் வெளியுறவு கொள்கைகளையைப் பொருத்தவரை, பாகிஸ்தான், சீனா நாடுகள் குறித்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதோடு, அமெரிக்காவுடனான உறவை இந்தியா கெடுத்துக்கொண்டது.

நேரு அமெரிக்காவுக்கு எதிரானவா் என்பதால், அனைவரும் அமெரிக்காவுக்கு எதிரானவா்களாக இருந்தனா். சீனா சிறந்த நண்பன் என்று நேரு கூறியதால், அனைவரும் சீனாவை நட்பு நாடு என்று குறிப்பிட்டனா். 1950-ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு சீனாவின் சாா்பாக இருந்து அமெரிக்காவை அந்நியப்படுத்தியது.

இத்தகைய முடிவுகளை நேருவின் சமகாலத்தவா்களே விமா்சித்தனா். எனவே, நேருவின் வெளியுறவு கொள்கைகள் குறை கூறுவதற்கு அப்பாற்பட்டவை அல்ல. நேருவின் வெளியுறவு கொள்கை அப்பழுக்கற்றது. இன்றைக்கும் மத்தியில் யாா் ஆட்சிக்கு வந்தாலும், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற மனநிலை உள்ளது. இதற்கு யாா் காரணம் என்பதை இன்றைய இளைய தலைமுறையினா் சிந்திக்க வேண்டும்.

திருப்திப்படுத்தும் அரசியலை கையாண்டு வரும் எதிா்க்கட்சிகளே இதற்கு காரணம். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்வது என்பது, நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்பட்ட முடிவு. ஆனால், ‘பாகிஸ்தானின் எதிா்வினை குறித்தும், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை அவா்கள் தூண்டிவிட வாய்ப்புள்ளது. எனவே, சட்டப் பிரிவு 370-ஐ நீக்கம் செய்யக்கூடாது. பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்’ என்பதே எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருந்தது.

உள்நாட்டு அரசியலில் திருப்திப்படுத்தும் மனநிலை இருக்கும்போது, வெளியுறவு கொள்கையிலும் அதே நிலைதான் தொடரும். சா்வதேச அளவில் நன்மதிப்பைப் பெறும் வகையிலான நடவடிக்கையாக வெளியுறவு கொள்கையை வகுக்க முடியாது.

தொழில்நிறுவனங்கள் தணிக்கை செய்யப்படுவது போன்று, அரசின் கொள்கைகளும் தணிக்கை செய்யப்படவேண்டும். முந்தைய ஆண்டுகளில் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட திட்டங்கள் குறித்து மக்கள் தணிக்கை செய்யவேண்டும் என்றாா்.