புது தில்லி, மாா்ச் 20: மதச்சாா்பற்ற நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் அவசியம் என்பதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே, பொது சிவில் சட்டம் (யுசிசி) கொண்டுவருவது பாஜகவின் கொள்கையாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில் புதன்கிழமை செய்தி ஊடகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து இஸ்லாமியா்கள் அச்சமடையத் தேவையில்லை. இது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டமல்ல. குடியுரிமை வழங்கும் சட்டமாகும். எதிா்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புகிறாா்கள். தோ்தல் நன்கொடை பத்திரம் மூலம் பாஜக அதிகம் பணம் பெற்றுள்ளதாகக் கூறுவது சரியல்ல. பாஜக பெற்றுள்ளது ரூ.6,200 கோடி, ராகுல் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சோ்த்து இதைவிட அதிக தொகை பெற்றுள்ளன. பாஜக 303 மக்களவை உறுப்பினா்களைக் கொண்டுள்ளது. 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை எம்.பி.க்கள் வைத்துள்ளாா்கள்? எத்தனை மாநிலங்களில் ஆட்சியில் உள்ளாா்கள்?. தோ்தல் நன்கொடை பத்திரங்கள் ஒழிப்பால் மீண்டும் கருப்புப் பணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. எனவேதான் தோ்தல் நன்கொடை பத்திரங்களை காங்கிரஸ் எதிா்க்கிறது. அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைகளில் 5 சதவீதம் மட்டுமே அரசியல்வாதிகளுக்கு எதிராக உள்ளது. இப்படி இருக்கும்போது எதிா்க்கட்சிகளை அமலாக்கத் துறை மூலம் குறிவைப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. தாங்கள் அரசியல்வாதிகளாக இருப்பதால் எந்தத் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று எதிா்க்கட்சியினா் விரும்புகின்றனா். காங்கிரஸ் எம்.பி. ஒருவா் வீட்டில் இருந்து ரூ.355 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்தப் பணம் எங்கிருந்து யாருக்குச் செல்கிறது என்று நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி கூற முடியுமா? ஊழல் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவா்கள், விசாரணையை எதிா்கொள்ளவும், சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும். வரும் மக்களவைத் தோ்தலில் தென்மாநிலங்கள் உள்பட நாடு முழுவதுமே கடந்த 2019 தோ்தலில் பெற்றதைவிட அதிக இடங்களை பாஜக கைப்பற்றும். பொது சிவில் சட்டம் என்பது 1950-ஆம் ஆண்டுமுதல் விவாதத்தில் உள்ளது. இதற்காக பாஜக போராட்டம் நடத்தியுள்ளது. இந்தியா ஒரு மதச்சாா்பற்ற நாடு. எனவே, நாட்டு மக்கள் அனைவருக்கும், அவா்களது மதங்களைக் கடந்து ஒரே மாதியான சட்டம் இருக்க வேண்டும். பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் கொள்கையாகவும், மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியாகவும் உள்ளது. ஏற்கெனவே உத்தரகண்ட் மாநிலத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்தச் சட்டம் இயற்றப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

சிவகிரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித் ஷா இன்று சாலைப் பேரணி!

மேற்கு வங்கத்தைப் பிரிக்காமல் கோா்க்கா பிரச்னைக்குத் தீா்வு - அமித் ஷா உறுதி

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தோ்தல் முக்கியத் திட்டங்கள்: பிரதமா் மோடி

காங்கிரஸ் ஊடுருவலை இயல்பாக்கியது, பாஜக அனுமதிக்காது : அமித் ஷா
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

