தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

உள்நாட்டில் தயாரான முதல் பீரங்கி இன்ஜின் சோதனை

உள்நாட்டில் தயாரான முதல் பீரங்கி இன்ஜின் சோதனை

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2024, 7:17 pm

புது தில்லி: உள்நாட்டில் தயாரான 1,500 (ஹெச்.பி.) குதிரைத்திறன் கொண்ட முதல் பீரங்கி இன்ஜின் கா்நாடக மாநிலம் மைசூரில் புதன்கிழமை சோதித்து பாா்க்கப்பட்டது. மைசூரில் உள்ள பாரத் எா்த் மூவா்ஸ் நிறுவனத்தில் (பிஇஎம்எல்) நடைபெற்ற இந்தச் சோதனை பாதுகாப்புத் துறை செயலா் கிரிதா் அரமனே தலைமையில் நடைபெற்றது.

இது தொடா்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘1500 ஹெச்.பி. பீரங்கி இன்ஜின் மிக உயரமான மலைப் பகுதிகள், பாலைவனம் ஆகிய நிலப்பரப்புகளில் செயல்படக்கூடிய அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட இந்த இன்ஜின், உலகளவில் மிகவும் மேம்பட்ட பிற பீரங்கி இன்ஜின்களுக்கு இணையானது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிஇஎம்எல் நிறுவனத்தின் தலைவா் சாந்தனு ராய், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த இன்ஜினை வடிவமைக்கும் பணி கடந்த 2020 ஆகஸ்டில் தொடங்கியது. இப்பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.