தேர்தல் நேரத் திருமணம்: வழக்குரைஞரை மணந்த ஆயுள் தண்டனைக் கைதி!

தேர்தல் நேரத் திருமணம் வரிசையில் வழக்குரைஞரை மணந்தார் ஆயுள் தண்டனைக் கைதி!
தேர்தல் நேரத் திருமணம்: வழக்குரைஞரை மணந்த ஆயுள் தண்டனைக் கைதி!

பிகாரைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதியான முதியவர் ஒருவர், வழக்குரைஞராக இருக்கும் 46 வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில், தனது மனைவிக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புப் பெறுவதற்காக, இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிகாரில் ஆயுள் தண்டனைக் கைதியான 62 வயது நபர், தனது புதுமண மனைவிக்கு அரசியல் கட்சியிலிருந்து மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்பதற்காக, அவசர அவசரமாக புதன்கிழமை அதிகாலை பாட்னா அருகே உள்ள கோயிலில் தில்லியைச் சேர்ந்த 46 வயது பெண்ணை மணந்தார்.

2002ஆம் ஆண்டு நவாடா சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு தப்பிய மிகப்பெரிய குற்றச்செயலில் முக்கிய குற்றவாளியான நீரஜ் பாண்டே, இன்று திருமணத்தை முடித்துள்ளார்.

திருமணம் முடிந்ததும் தம்பதியினர் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியின் இல்லத்துக்குச் சென்று ஆசி பெற்றனர்.

ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலன் சிங் ராஜீவ் ரஞ்சன் சிங்கை எதிர்த்து, அனிதா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ள அனிதா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

2001 ஆம் ஆண்டு 17 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற மஹ்தோ, டிசம்பர் 10, 2023 அன்று சிறையில் இருந்து விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் லாலுவை சந்தித்தார். மஹ்தோவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், மஹ்தோ தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தாலும், அவர் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளி என்பதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

சிறையில் இருக்கும் போது முதல் மனைவியை இழந்ததால், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மஹ்தோ முடிவு செய்து, அனிதாவை தேர்வு செய்தார்.

பல்வேறு ஜாதி மோதல்களில் ஈடுபட்டு, பல உயிரிழப்புகளுக்குக் காரணமான சம்பவங்களில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. 2005ல் முன்னாள் காங்கிரஸ் எம்பி ரஜோ சிங் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com