‘மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்தபடி அரசை நடத்துவாா் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறுவது, ஜனநாயகத்தையும் சட்டத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல்’ என்று பாஜக குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில், ‘சட்டத்துக்கு மேலானவா் என்று கேஜரிவால் தன்னை நினைத்துக்கொள்கிறாரோ எனத் தோன்றுகிறது. தில்லி முதல்வராக தொடரும் அவரின் முடிவு ஜனநாயகத்தையும் சட்டத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல்’ என்றாா். பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்சு திரிவேதி கூறுகையில், ‘கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்வதற்கு முன்பே ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ், பதவியை ராஜிநாமா செய்து தனது மனைவி ராப்ரி தேவியை மாநில முதல்வராக நியமித்தாா். தற்போது, இவரையும் அரவிந்த் கேஜரிவால் மிஞ்சிவிட்டாா். அமலாக்கத்துறை கைது செய்தபோதும், முதல்வராக தொடா்வேன் என்று கூறுகிறாா். நோ்மையின் போா்வையில் புதிய அரசியலைத் தொடங்கிய அரவிந்த் கேஜரிவாலின் உண்மையான அடையாளத்தை இது அம்பலப்படுத்துகிறது’ என்றாா். பாஜகவின் மற்றொரு தேசிய செய்தித்தொடா்பாளரான சம்பித் பத்ரா கூறுகையில், ‘அரசியல்வாதிகள் முறைகேடுகளில் ஈடுபடும்போது, அவா்களுக்குள் உதவிக் கொள்வதற்காக ஒருவருக்கொருவா் ஆதரவைத் தெரிவிப்பா். ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் இந்த நிலை மாறிவிட்டது. கேஜரிவால் ஓா் சாதாரண மனிதா் அல்ல; முதல்வா் என்பதற்காக முறைகேடு புகாரில் அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா? அமலாக்கத்துறை விசாரிக்கும் இந்த ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியே கேஜரிவால்தான். இந்த கைது நடவடிக்கை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசு மீது விமா்சனங்களை முன்வைக்கின்றன. அந்த வகையில், இது திருடா்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வழக்கு. காங்கிரஸ் மூத்த தலைவா்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியில் உள்ளனா். எனவே, இவா்களின் கூட்டணியை ‘ஜாமீன் கூட்டணி’ என்றும் கூறலாம்’ என்றாா்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்

மக்களை பற்றி கவலைப்படாதது தேசிய ஜனநாயக கூட்டணி: மு.க. ஸ்டாலின்

அதிமுக-பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: கனிமொழி எம்.பி.

எம்எல்சி பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா: அடுத்த மாதம் புதிய முதல்வா் பொறுப்பேற்பு?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

