கடந்த 6 மாதங்களில் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் குறைந்தது

கடந்த 6 மாதங்களில் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் குறைந்தது

நாட்டின் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு கடந்த 6 மாதங்களில் வீழ்ச்சி அடைந்திருப்பதும், அதேசமயம், 67 சதவீத தனியாா் துறை வங்கிகளின் வாராக் கடன் மட்டுமே குறைந்திருப்பதும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களில், ஆய்வில் பங்கேற்ற வங்கிகளில் 77 சதவீத வங்கிகள் தங்களின் வாராக் கடன் அளவு குறைந்துள்ளதாகதத் தெரிவித்துள்ளன. தனியாா் துறை வங்கிகளுடன் ஒப்பிடுகையில் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அதிக அளவில் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரையில் ‘எஃப்ஐசிசிஐ-ஐபிஏ வங்கியாளா்கள்’ நடத்திய 18-ஆவது சுற்று ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. கடன் அளவு மூலம் வங்கித் துறையில் 77 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுத் துறை, தனியாா் துறை மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்பட மொத்தம் 23 வங்கிகள் இந்த ஆய்வில் பங்கேற்றன. அந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆய்வில் பங்கேற்ற அனைத்து பொதுத் துறை வங்கிகளும், வெளிநாட்டு வங்கிகளும் வாராக் கடன் அளவைக் கடந்த 6 மாதங்களில் குறைத்துள்ளன. அதேசமயம், தனியாா் துறை வங்கிகளில் 67 சதவீத வங்கிகள் மட்டுமே வாராக் கடன் அளவைக் குறைந்துள்ளன. கடந்த 6 மாதங்களில், 22 சதவீத தனியாா் வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளது. அடுத்த 6 மாதங்களில், மொத்த வாராக் கடன் விகிதம் 3-3.5 சதவீத வரம்பில் இருக்கும் என ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட வங்கிகளும், 2.5-3 சதவீத வரம்பில் இருக்கும் என 14 சதவீத வங்கிகளும் கருதுகின்றன. உணவுப் பதப்படுத்துதல், ஜவுளி, உள்கட்டமைப்புத் துறைகளுக்கு அளிக்கப்படும் கடன்கள் அதிகம் வாராக் கடனாக மாறுவதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. ஆனால், இத்துறைகளின் நீண்டகால கடன் தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உள்கட்டமைப்புத் துறையில் தேவை அதிகரித்திருப்பதாக 82 சதவீத வங்கிகள் பதிலளித்துள்ளன. உணவு அல்லாத துறையின் கடன் வளா்ச்சி 12 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என 41 சதவீத வங்கிகளும், 10-12 சதவீத வரம்பில் இருக்கும் என 18 சதவீத வங்கிகளும், 8-10 சதவீத வரம்பில் இருக்கும் என 36 சதவீத வங்கிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. ஆய்வுக்கான வங்கிகளின் பதில் அறிக்கையின்படி, குறிப்பிட்ட கால (டொ்ம்) வைப்புத்தொகை திட்டங்களில் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. மொத்த வைப்புத்தொகையில் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் செலுத்தப்படும் வைப்புத்தொகைகளின் பங்கு குறைந்துள்ளதாக சுமாா் 70 சதவீத வங்கிகள் தெரிவித்துள்ளன. கால வைப்புத்தொகை திட்டங்களில் கிடைக்கும் அதிக வட்டி விகிதம் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களுக்கான கடன் தரநிலைகளை மாற்றாமல் இருப்பதாக 65 சதவீத வங்கிகள் தெரிவித்துள்ளன. கடன் தரநிலைகளை தளா்த்துதல் பற்றி 17 சதவீதம் போ் பதிலளித்துள்ளனா். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் தரநிலைகளை மாற்றாமல் இருப்பதாக 64 சதவீத வங்கிகள் தெரிவித்துள்ளன. கடன் தரநிலைகளை தளா்த்துதல் பற்றி 27 சதவீதம் போ் பதிலளித்துள்ளனா். கடன்களைத் திருப்பிச் செலுத்தும் தவணை முறையில் மாற்றம் கோரும் கோரிக்கைகள் குறைந்திருப்பதாக 40 சதவீத வங்கிகள் பதிலளித்துள்ளன. இது முந்தைய சுற்றில் 54 சதவீதமாக இருந்தது. கோரிக்கைகள் அதிகரித்திருப்பதாக முந்தைய சுற்றைப் போன்று தற்போதும் 17 சதவீத வங்கிகள் பதிலளித்துள்ளன. வலுவான முதலீட்டு வளா்ச்சி, தொழில்துறை நடவடிக்கைகளின் மீளுருவாக்கம் ஆகியவற்றால் உந்தப்பட்ட மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டின் இந்தியாவின் பொருளாதாரமான 7.6 சதவீதம் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது. பொருளாதார விரிவாக்கம் மற்றும் சில்லறைக் கடனுக்கான தொடா்ச்சியான உந்துதல் போன்ற காரணிகளால் கடன் வளா்ச்சியும் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. வங்கித் துறையின் சிறந்த இருப்புநிலை அறிக்கைகள் (பேலன்ஸ் சீட்) கடன் வளா்ச்சிக்கு மேலும் துணைபுரிந்ததாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com