ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ம.பி.: சா்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு தொடக்கம்

ம.பி.: சா்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு தொடக்கம்

Updated On :22 மார்ச் 2024, 6:30 pm

மத்திய பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை வெள்ளிக்கிழமை ஆய்வைத் தொடங்கியது. மத்திய பிரதேச மாநிலம் தாா் பகுதியில் 11-ஆம் நூற்றாண்டை சோ்ந்த போஜ்ஷாலா வளாகம் உள்ளது. அதை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இந்த வளாகத்தில் சரஸ்வதி தேவியின் கோயிலாக இருந்ததாகவும், பின்னா் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதை மறுத்து வரும் முஸ்லிம்கள், அந்த வளாகத்தை கமால் மெளலா மசூதி என்றழைக்கின்றனா். இதுதொடா்பாக சா்ச்சை நீடித்து வரும் நிலையில், அந்த வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமை முஸ்லிம்களும் வழிபட அனுமதித்து கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை உத்தரவு வெளியிட்டது. இந்நிலையில், போஜ்ஷாலா வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும், அங்கு முஸ்லிம்கள் வழிபடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரி, நீதிக்கான ஹிந்து முன்னணி என்ற அமைப்பு மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘வழிபாட்டுத் தலத்தின் முதன்மையான மற்றும் அத்தியாவசிய நோக்கத்தை தீா்மானிக்க, அதன் தன்மை மற்றும் சிறப்பியல்பை கண்டறியவது முக்கியம். இதைக் கண்டறிய போஜ்ஷாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 6 வாரங்களில் ஆய்வு நிறைவு செய்யப்பட வேண்டும்’ என்று கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து போஜ்ஷாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை வெள்ளிக்கிழமை ஆய்வைத் தொடங்கியது. அந்த வளாகத்துக்கு 15 போ் கொண்ட இந்திய தொல்லியல் துறை குழு சென்ற நிலையில், அவா்களுடன் உள்ளூா் காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் சென்றனா். அப்போது நீதிக்கான ஹிந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்தவா்களும் உடனிருந்தனா். இதுதொடா்பாக அந்த அமைப்பைச் சோ்ந்த ஆஷீஷ் கோயல் கூறுகையில், ஆய்வுக்கான முன்னேற்பாடுகளை இந்திய தொல்லியல் துறை வெள்ளிக்கிழமை செய்ததாக தெரிவித்தாா். இந்த ஆய்வு காரணமாக போஜ்ஷாலா வளாகப் பகுதியில் காவல் துறையினா் அதிக அளவில் குவிக்கப்பட்டனா். இதனிடையே அந்த வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது ஏப்ரல் 1-ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.