உத்தரப் பிரதேசம்: கைப்பேசியை சார்ஜ் செய்தபோது தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலி


உத்தரப் பிரதேசத்தில் கைப்பேசியை சார்ஜ் செய்தபோது தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பல்லவபுரம் பகுதியில் உள்ள ஜனதா காலனியில் வீடு ஒன்றில் கைப்பேசியை சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ஷார்ட் சர்க்யூட் காரணமாக நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. தீ உடனே படுக்கை விரிப்பிலும் பரவியது. இந்த சம்பவத்தில் 4 சிறுவர்கள் பலியானார்கள்.
அவர்களது பெற்றோர் ஜானி (41), பபிதா (37) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜானி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பபிதாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைப்பேசியை சார்ஜ் செய்யும் போது தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினரிடம் ஜானி தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...