கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகளும் மேடையில் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26 மற்றும் மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் மஜத இணைந்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில், துமகுரு மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சோமண்ணாவை அறிமுகம் செய்யும் செயல்வீரர்கள் கூட்டத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் திங்கள்கிழமை பங்கேற்றுள்ளனர்.
அந்த கூட்டத்தில் பேசிய மஜத எம்எல்ஏ கிருஷ்ணப்பா, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தான் தோற்றதற்கு காரணம் பாஜகவின் கொண்டஜ்ஜி விஸ்வநாத் என்று குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, மேடையில் இருந்த பாஜக நிர்வாகிகள் கிருஷ்ணப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே அவரிடம் இருந்து மைக்கை வாங்கியதால் இரு கட்சியினரிடமும் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே பாஜக தலைவர் தேஜஸ்வி செய்தியாளர்களுடன் பேசுகையில், “கர்நாடகத்தில் பாஜக - மஜத கூட்டணி மக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து 28 மக்களவைத் தொகுதிகளையும் எங்கள் கூட்டணி கைப்பற்றும்.” எனத் தெரிவித்தார்.
மேலும் மஜத இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமி கூறியதாவது, “எங்களின் கூட்டணி மிகவும் இயற்கையானது, ஆரோக்கியமான கூட்டணி. காங்கிரஸ் ஒற்றை இலக்கில் மட்டுமே வெற்றி பெறும் என்று அவர்களுக்கு தெரியும்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சொல்லப் போனால்... அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

ஒடிஸாவில் மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்பு -காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்; ஆனால்...! - விஜய் பேச்சு

பிகாா் தோ்தலில் ரூ.40,000 கோடி செலவிட்டது பாஜக கூட்டணி: பேரவையில் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

