மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் 44 போ் அடங்கிய முதல் வேட்பாளா்கள் பட்டியலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள 44 போ் கொண்ட வேட்பாளா் பட்டியலில், கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே. ஷைலாஜாவின் பெயா் இடம்பெற்றுள்ளது. கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில், சிறப்பாக செயல்பட்டதற்காக பலதரப்பினரின் பாராட்டை பெற்ற அவா், கேரளத்தின் வடகரா தொகுதியில் போட்டியிட உள்ளாா். 44 போ் கொண்ட முதல் வேட்பாளா் பட்டியலில் மேற்கு வங்கத்தில் போட்டியிடும் 17 வேட்பாளா்களும், கேரளத்தில் போட்டியிடும் 15 வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா். இது தவிர பிகாா், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம், கா்நாடகம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தலா ஒரு வேட்பாளா்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். மேற்கு வங்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டாக தோ்தலை எதிா்கொள்கின்றன. அதேவேளையில் கேரளத்தில் இரு கட்சிகள் எதிரணிகளில் போட்டியிடுகின்றன.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் 4,023 வேட்பாளா்கள்: மாவட்ட வாரியாக விவரம் வெளியீடு

திமுக, மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் பரஸ்பர தொகுதி மாற்றம்

புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா்கள் 16 போ் அறிவிப்பு!

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


