வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு
-

புது தில்லி: ரூ.1823.08 கோடிக்கு வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பியிருக்கும் புதிய நோட்டீஸை செய்தியாளர்களிடம் காண்பித்த காங்கிரஸ் கட்சி, பாஜக அரசு, வரி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, நிதிநிலையில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரூ.1,700 கோடி செலுத்த காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

நான்கு ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்கை மறுதணிக்கை செய்ய தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியான நிலையில், வருமான வரித்துறை இந்த புதிய நோட்டீஸை அனுப்பியிருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான் உள்ளிட்டோர் புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது, பாஜக தற்போது வரி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுகிறது, பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை முடக்கி, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதே பாஜகவின் நோக்கம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

பாஜக, தொடர்ச்சியான வருமான வரித்துறை விதி மீறலை மேற்கொண்டு வருகிறது. வருமான வரித்துறை, பாஜகவிடமிருந்து ரூ.4,600 கோடிக்கு மேல் அபராதத்தை திரட்ட வேண்டியது இருக்கும் என்று அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் கடந்த 2014 - 2021ஆம் நிதியாண்டில் கணக்கில் வராத தொகை ரூ.523.87 கோடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, அண்மையில், காங்கிரஸ் வங்கிக் கணக்கிலிருந்து வருமான வரித்துறை அபராதமாக ரூ.135 கோடியை நிலுவைப் பிடித்தங்களை செய்தபோதுதான் கட்சி நிர்வாகத்துக்குத் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது ரூ.523.87 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணப்பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வங்கிக் கணக்கிலிருந்து ரூ.135 கோடி பிடித்தம் செய்யும் நடைமுறையை நிறுத்திவைக்கக் கோரி முறையிடப்பட்டது. ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேவேளையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com