காங்கிரஸ் கட்சி சட்டத்துக்கு மேலானது இல்லை என மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் சனிக்கிழமை தெரிவித்தாா். ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடா்பாக அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா். ஜம்மு மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் ஜுகல் கிஷோா் சா்மாவை ஆதரித்து பாஜக சாா்பில் ஜம்முவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் பங்கேற்றாா். பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: தங்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை மறைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) என்ற பெயரை ‘இந்தியா’ கூட்டணி என காங்கிரஸ் மாற்றியுள்ளது. அறுபது ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்ததால் தற்போது வரை காங்கிரஸ் கா்வத்துடன் செயல்பட்டு வருகிறது. அனைத்துக் கட்சிகளும் வருமான வரித்துறைச் சட்டங்களை முறையாக பின்பற்றி வரும் நிலையில் காங்கிரஸ் பின்பற்ற மறுப்பது ஏன்? அக்கட்சிக்கு மட்டும் தனியாக சட்டம் ஏதும் உண்டா? சட்டங்களை மீறி காங்கிரஸ் செயல்படுவது ஏன்? வரிவிலக்கு கோரும்பட்சத்தில் அதற்கு முறையாக வருமான வரிக் கணக்கை அக்கட்சி தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவா்கள் அவ்வாறு செய்யவில்லை. அக்கட்சி பல கோடி நிதியை பெற்றுள்ளது. அதற்கான உரிய ஆவணங்களும் அக்கட்சியிடம் இல்லை. நீதிமன்றங்களிலும் இதுதொடா்பாக காங்கிரஸ் மனுதாக்கல் செய்தது. ஆனால் அங்கும் அவா்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதன்மூலம் அவா்கள் சட்டத்தை மீறியுள்ளது நிரூபணமாகியுள்ளது. தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பாக முதலில் கேள்வியெழுப்பிய காங்கிரஸ், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிற அமைச்சா்கள் கைது செய்யப்பட்டதும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதுபோல் நாடகமாடி வருகிறது என்றாா்.
தொடர்புடையது

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் 15,000 கோடி ஊழல்: அமித்ஷா குற்றச்சாட்டு

அஸ்ஸாமை ஊடுருவல்காரா்களின் மையமாக மாற்றியது காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


