

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழையால் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குவதற்காக சுரங்கம் அருகே வீடு கட்டப்பட்டது. கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. தேவையான நடவடிக்கைகளக்குப் பிறகு அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படும்.
கனமழையால் அதே பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பலியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மாகாணத்தின் ஹர்னாயில் ஒரு சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு வெடித்ததில் 12 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பலியான சில நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.