பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸில் இணைந்தார் மேயர் கட்வால் விஜயலட்சுமி

ஹைதராபாத் மாநகராட்சி மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

News image
Updated On :30 மார்ச் 2024, 9:46 am

DIN

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஹைதராபாத் மாநகராட்சி மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

முன்னாள் பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கேசவ் ராவின் மகள் விஜயலட்சுமி.

கேசவ் ராவ் மற்றும் தெலங்கானா முன்னாள் துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி ஆகியோர் பிஆர்எஸ் கட்சியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினர். பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகிய ராவ், காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதை உறுதி செய்தார்.

மேலும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் கேசவ் ராவ் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், முதல்வர் ரெவந்த் ரெட்டி மற்றும் அகில இந்தியக் காங்கிரஸ் பொறுப்பாளர் தீபாதாஸ் முன்ஷி ஆகியோர் முன்னிலையில் ஹைதராபாத் மாநகராட்சி மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.