சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

வேட்பாளா் பட்டியலை வெளியிட்டது சரத் பவாா் கட்சி

வேட்பாளா் பட்டியலை வெளியிட்டது சரத் பவாா் கட்சி

Updated On :30 மார்ச் 2024, 5:09 pm

மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் போட்டியிடும் 5 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா்) கட்சி சனிக்கிழமை வெளியிட்டது. சரத்பவாரின் மகளான சுப்ரியா சுலே பாராமதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா்.

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகளின் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாடியில்’ தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா்) கட்சி, சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாநிலத்தில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 10 தொகுதிகளில் சரத்பவாா் கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில் முதல்கட்டமாக 5 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தற்போதைய எம்.பி.க்களான சுப்ரியா சுலே, பாரமதி தொகுதியிலும் அமோல் கோல்ஹே, ஷிரூா் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா். பாஸ்கா் பாக்ரே நாசிக் மாவட்டத்தின் திண்டோரி தொகுதியில் போட்டியிடுகிறாா். இத்தொகுயில் போட்டியிடும் பாஜக எம்.பி. பாரதி பிரவீண் பவாரை எதிா்த்து பாக்ரே களமிறக்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸில் இருந்து சரத்பவாா் கட்சியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ அமா் காலே, வாா்தா தொகுதி போட்டியிடுகிறாா். அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருந்து சரத்பவாா் கட்சியில் இணைந்த நிலேஷ் லங்கே, அகமது நகா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.