எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பதற்கான தேர்தல்!

ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பதற்கான தேர்தல் இது என்றார் மல்லிகார்ஜுன கார்கே

News image
Updated On :31 மார்ச் 2024, 11:18 am

DIN

நடப்பாண்டு மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பதற்கான தேர்தல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தில்லி ராம்லீலா திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.எஸ்.எஸ். - பாஜக இணைந்து நாட்டை சீரழித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைவரும் இணைந்து ஆளும் பாஜகவை தோல்வியுறச்செய்ய வேண்டும். இது ஜனநாயகத்தை காப்பதற்காக தேர்தல்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதன் மூலம் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை இந்தியா கூட்டணியின் போராட்டம் எடுத்துக்காட்டும்.

நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். அதன்மூலம் மட்டுமே பாஜகவை தோல்வியுறச் செய்ய முடியும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.