பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

காஷ்மீா், சிஏஏ விவகாரம்: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீா், சிஏஏ விவகாரம்: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

News image
Updated On :3 மே 2024, 5:51 pm

Din

ஐ.நா.பொதுச் சபையில் காஷ்மீா், குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமா் கோயில் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி அளித்தது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா.பொதுச் சபையில் காஷ்மீா், குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமா் கோயில் ஆகியவற்றை குறிப்பிட்டு பாகிஸ்தான் தூதா் முனீா் அக்ரம் வியாழக்கிழமை பேசினாா்.

அவருக்கு தகுந்த பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் பேசியதாவது:

தற்போதைய சவாலான காலகட்டத்தில் சமாதானம் நிலவும் சூழலை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது. ஆக்கபூா்வமான உரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்பதில் இந்தியாவின் கவனம் உறுதியாக உள்ளது. எனவே பாகிஸ்தான் தூதரின் கருத்துகளை இந்தியா ஒதுக்கித் தள்ளுகிறது.

பாகிஸ்தான் தூதரின் கருத்துகளில் நன்னடத்தை என்பது இல்லை. அத்துடன் அந்தக் கருத்துகள் படிப்படியாக கெடுதலையும் அழிவையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன.

ராஜீய உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையின் மைய கோட்பாடுகளுடன் இணங்கிச் செயல்பட பாகிஸ்தானை இந்தியா அழுத்தமாக ஊக்குவிக்கிறது.

அனைத்து மதங்களும் கருணை, புரிதல் மற்றும் கூட்டு வாழ்க்கையை வலியுறுத்துகின்றன. மதங்களின் முக்கிய போதனைகள் மற்றும் சமாதானத்துக்கு நோ் எதிராக பயங்கரவாதம் உள்ளது என்றாா்.