ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

News image
வாட்ஸ்ஆப் பயனாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் புதிய வசதி
Updated On :3 மே 2024, 5:59 am

DIN

2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவில் சுமார் 2 கோடி கணக்குகளை வாட்ஸ்ஆப் செயலி நீக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இதேக்காலக்கட்டத்தில் நீக்கப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகளின் எண்ணிக்கையை விட இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்துட்பத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் செயலியின் நம்பகத்தன்மை, தரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதாவது, அதாவது, கடந்த ஜனவரி மாதத்தில் மடடும் கிட்டத்தட்ட 67 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் 76 லட்சமும், மார்ச் மாதத்தில் 79 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 2,23,10,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

இதேக்காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29 லட்சமும், பிப்ரவரி மாதத்தில் 45 லட்சமும், மார்ச் மாதத்தில் 47 லட்சமும் என ஒட்டுமொத்தமாக 1,22,31,306 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வாட்ஸ்ஆப் தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஒருவேளை உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை திறந்ததும், அதில், உங்கள் கணக்கில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த அனுமதியில்லை என்ற தகவல் வரும். எங்களது விதிமுறைகளுக்கு மாறாக ஒரு வாட்ஸ்ஆப் கணக்கு செயல்பட்டால் அதனை நாங்கள் நீக்கிவிடுவோம். அதாவது ஸ்பேம், ஸ்கேம் போன்றவற்றில் ஈடுபடும் வாட்ஸ்ஆப் கணக்குகள் மூலம் பிற பயனர்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.