திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

News image
Updated On :4 மே 2024, 11:26 am

காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

அரவிந்தர் சிங் லவ்லியுடன், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜ்குமார் சௌகான், நசீப் சிங், நீரஜ் பசோயா மற்றும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அமித் மல்லிக் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அரவிந்த் சிங் தனது ராஜிநாமா கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸின் முடிவில் தனக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் காங்கிரஸில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்டத்தின் போது, ​​தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.