பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க சிறப்பு உதவி எண்ணை கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது.
எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா
எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா

கா்நாடகம், ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொளியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்விவகாரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. பிரஜ்வலின் மீது பல பெண்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ப்ரஜ்வலின் தந்தை எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவரிடம் தற்போது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ‘6360938947’ என்ற உதவி எண்ணை கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு வெளியிட்டுள்ளது. இதனை காவல்துறை டி.ஜி.பியும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவருமான பி.கே.சிங் அறிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க நேரில் வர அவசியமில்லை. 6360938947 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் எங்களின் குழு உங்களை அணுகி தனிப்பட்ட முறையில் தகவல்களை வாங்கிக் கொள்வார்கள். உங்களுடையத் தனிப்பட்ட தகவல்கள் எங்கும் பகிரப்படாது. உங்களுக்கன நீதி கிடைக்க எங்களின் குழு உறுதி அளிப்பார்கள்.

மேலும், பிரஜ்வல் மற்றும் அவரது தந்தையால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய காணொளிகளை யாரும் தனிப்பட்ட முறையில் பகிர வேண்டாம். அப்படி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com