/

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

நடிகரும், தொலைக்காட்சி நெறியாளருமான சேகர் சுமன் பாஜகவில் இன்று இணைந்தார்.

News image
பாஜகவில் இணைந்த ராதிகா கேரா / சேகர் சுமன்
Updated On :7 மே 2024, 10:50 am

DIN

நடிகரும், தொலைக்காட்சி நெறியாளருமான சேகர் சுமன் பாஜகவில் இன்று (மே 7) இணைந்தார்.

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் பேசிய சேகர் சுமன், ''பாஜக அலுவலகத்தில் அமர்ந்திருப்பேன் என நேற்றுவரை நான் நினைக்கவில்லை. வாழ்கையில் பல விஷயங்கள் நடக்கின்றன. சில நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாது. மேலே இருந்து வரும் வழிகாட்டுதல்கள் படி நடக்கவேண்டியிருக்கும். நேற்மறையான எண்ணத்தில் பாஜகவில் இணைந்துள்ளேன். என்னை வழிநடத்தி அழைத்துவந்த கடவுளுக்கு நன்றி.

ராதிகா கேரா / சேகர் சுமன்

ராதிகா கேரா / சேகர் சுமன்

எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் கிடையாது. நாட்டின் நலன் குறித்த சிந்தனை மட்டுமே உள்ளது. பகவான் ராமர் என்ன போதித்தாரோ அதன்படி நடக்கிறேன். ஒரு விஷயத்தை சொல்வதற்கும் அதனை செய்து காட்டுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நான் எதையாவது செய்துவிட்டு பேச வேண்டும் என நினைக்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, அனுராக் தாக்குர் என அனைவருக்கும் நன்றி'' எனப் பேசினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராதிகா கேராவும் அக்கட்சியிலிருந்து விலகி, இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.