அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார் என்று மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து ராகுல் காந்தி, பொதுக் கூட்டங்களில் பேசியபோது அதானி பெயரை 103 முறையும் அம்பானி பெயரை 30 முறையும் உச்சரித்திருக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணம் வாங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

தெலங்கானாவில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் அறிவித்த பிறகு, ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் அதானி, அம்பானி குறித்து பேசுவதை நிறுத்திவிட்டார்கள். அவர்களிடமிருந்து எவ்வளவு கருப்புப் பணத்தை வாங்கினீர்கள்? மக்களவைத் தேர்தலுக்காக எவ்வளவு நன்கொடை வாங்கப்பட்டது? ஐந்து ஆண்டுகாளக பேசி வந்தவர்கள் ஒரே இரவில் அமைதி காப்பது ஏன்? நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் ஜெய்ராம் ரமேஷ், இந்த முறை, தேர்தலின் தாக்கம், நாம் இருவர் நமக்கு இருவர் என்று கூறும் "அப்பா"வே தனது இரண்டு பிள்ளைகளுக்கு எதிராக திரும்பும் அளவுக்கு மிகமோசமான வன்முறைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

தனது கட்சிக்காக, தேர்தல் நன்கொடை பத்திரம் என்று கூறி ரூ.8,200 கோடி அளவுக்கு வசூலித்து, அதனை உச்ச நீதிமன்றமே அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவித்துவிட்டது. ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவரே மற்றவர்கள் மீது அந்தக் குற்றச்சாட்டை சுமத்துகிறார்.

கட்சிக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நான்கு வழிகளில் ஒப்பந்தம் மற்றும் உரிமம் என ரூ.4 லட்சம் கோடிக்கு தனது கோடீஸ்வர நண்பர்கள் அளித்த நன்கொடையை திருப்பியளித்துள்ளார்.

தற்போது 70 கோடி இந்தியர்களின் சொத்தும் 21 இந்திய கோடீஸ்வரர்களிடமே இருக்கிறது என்றால், அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைக்கும் நோக்கத்துக்குமே நன்றி சொல்ல வேண்டும். அந்த 21 தொழிலதிபர்களில், நமக்கிருவர் என்று சொல்லும் அந்த இரண்டு பேரும் உள்ளடக்கம்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதியிலிருந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், மொதானி மோசடி குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். தேர்தல் தொடங்கியபிறகும்கூட காங்கிரஸ் இதையே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஐந்து நாள்களுக்கு முன்பும் கூட இது வலியுறுத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தின்போது 103 முறை அதானி பெயரையும் அம்பானி பெயரை 30 முறையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், மொதானி முறைகேடு குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்படும். இந்த மோசடியின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

தோல்வி என்பது உறுதியான நிலையில், பிரதமர் மோடி, தற்போது தனது நிழலைக் கூட பயமுறுத்துகிறார் என்று எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com