திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொய்யைக் கண்டறியும் இயந்திரமே நின்றுவிடும்: மோடி குறித்து ஆர்ஜேடி தலைவர்

பொய்யைக் கண்டறியும் இயந்திரமே நின்றுவிடும்: மோடி குறித்து ஆர்ஜேடி தலைவர்

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :9 மே 2024, 9:51 am

DIN

பொய் பேசுவதைக் கண்டறியும் இயந்திரம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் வைத்தால், அவர் பேசும் பொய்களைக் கேட்டு இயந்திரமே நின்றுவிடும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மனோஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய மனோஜ் குமார் ஜா, பேசுகையில், பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் கீழ்த்தரமாக பேசி வருகிறார். அதனாலேயே அவர் தோல்வியை சந்திப்பார்.

தான் தோல்வியை சந்திக்கப்போகிறோம் என்பது தெரிந்துவிட்டதால்தான் மோடி தரம்தாழ்ந்த கருத்துகளை பேசி வருகிறார். ஒருவேளை, பொய் பேசுவதைக் கண்டறியும் இயந்திரத்தை, பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் வைத்துவிட்டால், மோடி பேசும் பொய்களைக் கேட்டு, அந்த இயந்திரமே நின்றுபோய்விடும் என்று தெரிவித்துள்ளார்.

எத்தனை பொய்கள்.. பொய்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது ஒரு பிரதமரின் வேலையல்ல, இது ஒரு பிரதமர் பேசுவதற்கான அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.

அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணம் வாங்கியது என்பது போன்ற கருத்துகளை நேற்று பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும், ராகுல் மற்றும் பிரியங்கா சார்பிலும் கடும் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், இன்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.