மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஸாவின் சட்ட பேரவைத் தேர்தலும் நாளை (மே 13) நடைபெறுகிறது
10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கவுள்ளது.
இந்த 96 தொகுதிகளில் 2019 தேர்தலில் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் 11 தொகுதிகளிலும் ஆளும் பாஜக கூட்டணி 47 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பாஜக 42 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் 6-க்கும் குறைவான தொகுதிகளைப் பெற்றது.
பிராந்திய கட்சிகளான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் பிஆர்எஸ் கட்சி 9 இடங்களிலும் ஓவைசியின் கட்சி மற்றும் பிஜு ஜனதா தளம் தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி 40.34 சதவிகித வாக்கும் இந்தியா கூட்டணி 23.73 சதவிகித வாக்கும் (தேசியவாத மற்றும் சிவசேனை கட்சிகள் தவிர்த்து) இந்த தொகுதிகளில் பெற்றன.
திங்கள்கிழமை 90 தொகுதிகளுக்கான போட்டியில் 1,717 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி 92 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. பாஜக 70, காங்கிரஸ் 61 மற்றும் ஓய்எஸ்ஆர் கட்சி 25 இடங்களிலும் போட்டியிடுகிறது.
தெலங்கானா- 17, ஆந்திர பிரதேசம்-25, மத்திய பிரதேசம்- 8, உத்தரப் பிரதேசம்- 13, மகாராஷ்டிரா- 11, மேற்கு வங்கம்-8, பிஹார்-5, ஜார்க்கண்ட்- 4, ஒடிசா- 4 மற்றும் ஜம்மு காஷ்மீர்- 1 ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
நான்காம் கட்டம் முடிவுற்றால் ஒட்டுமொத்தமாக 379 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துவிடும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடிப்பது யார்? கருத்துக் கணிப்பு வெளியானது!

கொல்கத்தாவின் 11 தொகுதிகளிலும் திரிணமூல் வெல்லும் : சுதீப் பானர்ஜி

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


