தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மக்களவை தேர்தல் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

ஆந்திர பிரதேசம், ஒடிஸா உள்பட 9 மாநிலங்களில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

News image

படம் | பி டி ஐ

Updated On :13 மே 2024, 12:54 pm

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(மே. 13) நடைபெற்று முடிந்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

ஆந்திரத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுடன் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து ஒரே கட்டமாக திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதேபோல், ஒடிஸாவில் முதல் கட்டமாக 4 மக்களவைத் தொகுதிகளுடன் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, ஜாா்க்கண்டில் 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.