குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர்? அமலாக்கத் துறை தகவல்
குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர்? அமலாக்கத் துறை தகவல்


புது தில்லி: தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் இணைக்கப்படவிருப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை கடந்தாண்டு கைது செய்திருந்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த பணமோசடி வழக்கை அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதில், ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் சேர்க்கப்படவிருக்கிறது. மதுபானக் கொள்கை மூலம் பணம் முறைகேடு செய்யப்பட்டு ஆம் ஆத்மி கட்சி அதன் மூலம் பலன்பெற்றுள்ளது. அதாவது, ஆம் ஆத்மி கட்சி முறைகேடாக பணம் ஈட்டியதில் மணீஷ் சிசோடியாக முக்கியப் பங்காற்றியுள்ளார் என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...