
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்த சொத்துவிவரங்களின் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மோடியின் பெயரில் அசையா சொத்துகள், சொந்தமாக கார் இல்லை என்றும், ரூ. 2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ, குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முடித்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய மக்களவைத் தேர்தலின்போது பிரதமரின் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ. 2.51 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.