
மதத்தின் பெயரால் வாக்கு கேட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்து தெய்வங்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள், சீக்கிய தெய்வங்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வாக்கு சேகரித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரிடம் இவ்வழக்கு குறித்த குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுமாறு கேட்டுக் கொண்டது.
மதத்தின் பெயரால் வாக்கு கேட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.