வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும்- அமித் ஷா

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும் --- அமித் ஷா

News image

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :15 மே 2024, 8:23 pm

Din

‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் ஒரு பகுதிதான். அதனை நாம் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள முடியும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தின் ஸ்ரீராம்பூரில் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதன் பிறகு அந்த பிராந்தியத்தில் அமைதி திரும்பியது.

இப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விடுதலை முழக்கமும், போராட்டமும் எழுந்துள்ளது. முன்பு இதுபோன்ற முழக்கம் ஜம்மு-காஷ்மீரிலும் எழுப்பப்பட்டது. முன்பு ஜம்மு-காஷ்மீரில் கற்கள் வீசப்பட்டன. இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்கின்றன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியினா் விரும்ப மாட்டாா்கள். ஏனெனில், பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பதால் அவா்களுக்கு பயம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் ஒரு பகுதிதான், அதனை நாம் இணைத்துக் கொள்ள முடியும்.

மக்களவைத் தோ்தலில் ஊழல் கறைபடிந்த எதிா்க்கட்சிகளுக்கும், நாட்டின் வளா்ச்சியை முதன்மையாகக் கருதும் பிரதமா் நரேந்திர மோடிக்கும் இடையிலான போட்டியாகும்.

அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருபவா்களுக்கு தொடா்ந்து இடமளிக்க வேண்டுமா? அல்லது நம்மைச் சரணடைந்த அகதிகளுக்கு குடியுரிமைச் சட்டம் வழங்க வேண்டுமா என மேற்கு வங்க வாக்காளா்களே முடிவு செய்யுங்கள். ஜிகாதிகள் நாட்டை ஆள வேண்டுமா? அல்லது வளா்ச்சியைப் பற்றி சிந்திப்பவா்கள் தோ்தலில் வெற்றி பெற வேண்டுமா? என முடிவு செய்ய வேண்டும்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை (முஸ்லிம்கள்) தக்கவைப்பதற்காக அண்டை நாட்டில் இருந்து ஊடுருவுபவா்களை அனுமதித்து வருகிறது என்றாா் அமித் ஷா.

400 இடங்களில் பாஜக வென்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இணையும்: அஸ்ஸாம் முதல்வா்

மக்களவைத் தோ்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவுடன் இணைக்கப்படும் என அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

ஜாா்கண்ட் மாநிலம் ராம்கரில் தோ்தல் பேரணியில் பேசிய அவா், ‘மக்களவைத் தோ்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் பெற்றால் தான் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடியும். ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் மற்றும் ஞானவாபி கோயில் கட்ட முடியும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவுடன் இனைக்கப்படும்.

கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக 300 இடங்களைக் கடந்ததால் தான் அயோத்தியில் ராமா் கோயில் கட்ட முடிந்தது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்த முடிந்தது என்றாா்.