

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கபில் சிபல் 1,066 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதீப் ராய் என்பவர் 689 வாக்குகளே பெற்றார்.
கபில் சிபல் ஏற்கனவே உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 2001-2002 ஆம் ஆண்டுகளில் இருந்துள்ளார். அதற்கு முன்னதாக, 1995-96 மற்றும் 1997-98 ஆம் ஆண்டுகளிலும் அவர் தலைவராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.