கேரளத்தில் தீவிரமடையும் மழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

மே 18 முதல் 20 வரை பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தீவிரமடையும் மழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தின் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் மே 18 முதல் 20 வரை பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு மற்றும் மலப்புரத்திற்கு மே 18-ஆம் தேதியும், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் இடுக்கிக்கு மே 19ம், மாநிலத்தின் ஏழு மாவட்டங்களுக்கு மே 20-ஆம் தேதியும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 20 ஆம் தேதி சில மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரெட் அலர்ட் போல மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று, மாநிலத்தின் 14 மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 30ல் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com