போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

பங்குச்சந்தையில் போலி முதலீடு: தில்லி பெண் ரூ.23 லட்சம் இழப்பு

தில்லியை சேர்ந்த 32 வயதான பெண், போலியான முதலீட்டு இணையத்தளத்தில் பணம் செலுத்தி ரூ.23.5 லட்சம் இழந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக வாக்குறுதி அளித்த சமூக வலைத்தள விளம்பரத்தை நம்பி, தில்லியை சேர்ந்த பெண் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகையாக முதலீடு செய்து வந்துள்ளார்.

ரூ.1000 முதலீடு செய்தபோது ரூ. 1300 ஆக திரும்ப கிடைத்தது, அவரது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் ரூ.23.5 லட்சம் முதலீடு செய்த பிறகு இணையத்தளத்தில் தொடர்புகொண்ட நபர் கிடைக்கவில்லை என தெரிந்ததும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் தில்லி மெளஜ்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது தாவூத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து ரூ.8.55 லட்சம் மீட்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளானர். மேலும், 17 சிம் கார்டுகள், 11 டெபிட் கார்டுகள், 4 பாஸ்புக்குகள் மற்றும் 15 செக் புக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தாவூத்துடன் தொடர்புடைய இன்னொரு நபரை தேடி வருவதாக தில்லி வடகிழக்கு சைபர் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com