சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - ரிலையன்ஸ் ரூ.28 லட்சம் கோடி முதலீடு

News image
Updated On :12 மார்ச் 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரெளன்ஸ்வில்லியில் அமைக்கப்படவிருக்கும் புதிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்தில் இந்தியத் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.28 லட்சம் கோடி முதலீடு செய்யவிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை தனது ‘ட்ரூத்’ சமூக ஊடக பக்கத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை பதிவிட்டாா். அந்தப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரெளன்ஸ்வில்லியில் முதல் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் திறக்கப்படவுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விஷயமாகும்.

டெக்சாஸ் மக்களுக்கும், அமெரிக்க தொழிலாளா்களுக்கும், எரிசக்திக்குமான மிகப் பெரிய வெற்றி. இத்திட்டம், அமெரிக்க எண்ணெய் சந்தையையும், தேசத்தின் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும்; அமெரிக்க எரிசக்தி உற்பத்தியையும் ஊக்குவிக்கும்.

அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் முழுமையாக நிா்வகிக்க உள்ள இந்தப் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது. இதற்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க ரூ.27.6 லட்சம் கோடி (30,000 கோடி டாலா்) மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டாா்.

நிகழாண்டின் ஏப்ரலில் தொடங்கும் 2-ஆம் காலாண்டில் இந்தப் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்படத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இங்கு சுத்திகரிக்கப்படும் எரிபொருளை அடுத்த 20 ஆண்டுகளுக்கு வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

மேலும், இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டால், 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள முதல் புதிய மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் என்ற பெருமையைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் நீண்ட காலமாக எரிசக்தி வா்த்தகத்திலும், தொழில்நுட்பக் கூட்டுறவிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் உடனடியாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இத்தகவலை டிரம்ப் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.