
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர்கள்’ தலித்துகள், பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ’எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆதித்யநாத்தின் மனநிலை ஆர்எஸ்எஸ் இணைய தளத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பிரதிபலிக்கிறது.
இந்தியா கூட்டணியினர் 'புல்டோசரை' எப்படி இயக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகியிடம் இருந்து வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், யோகியின் 'புல்டோசர்' தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறது.
’400 இடங்களில் வெற்றிபெறுவோம்’ என்ற அவரது முழக்கத்தின் ரகசியமும் இதுதான்.
மக்களவைத் தேர்தலில் 400 இடங்கள் பெரும்பான்மையுடன், பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை திருத்தவும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கவும் அவர் விரும்புகிறார்.
அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, 'மனுவாதி சிந்தனை' அடிப்படையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, ஆர்எஸ்எஸ்ஸின் பல ஆண்டு கால சதியை செயல்படுத்த பாஜக விரும்புகிறது” எனக் கூறினார்.
முன்னதாக உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,"நிலையற்ற தன்மையை" உருவாக்க இந்தியா கூட்டணி களமிறங்குவதாகவும், தேர்தலில் சீட்டுக்கட்டு போல் சரிந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே சென்றுவிடுவார். அவர்கள் புல்டோசர்களை எங்கு பயன்படுத்துவது, எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பயிற்சி எடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.