/

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :18 மே 2024, 2:43 pm

DIN

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ,இன்று செய்தியாளர்களுடன் பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் எனவும் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் எனவும் காங்கிரஸ் பொய்களைப் பரப்பி வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது :

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி,அரசியலமைப்பு சட்டதையும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் உருவாக்கிய இடஒதுக்கீடு முறைகளையும் பின்பற்றி வருகிறது. இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தையும் இடஒதுக்கீடு முறையையும் எந்த அரசாலும் மாற்ற முடியாது.

காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் எஸ்சி,எஸ்டி,ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை கொள்ளை அடித்து இஸ்லாமியர்களுக்கு தர முயற்சி செய்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அம்பேத்கருக்கு ஒருபோதும் மரியாதை கொடுத்ததில்லை.

1990 ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் (பாஜக ஆதரவு) தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் அவரை அவமதித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அம்பேத்கரின் நோக்கத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அவர் வகுத்த பாதையையும் கடைப்பிடித்தது.

இஸ்லாமியர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அரசியலமைப்புக்கு எதிராக மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறார்கள்.காங்கிரஸூம் ராஷ்டிரிய ஜனதா தளமும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்குத் தர முயற்சி செய்கிறது.

மூத்த பாஜக தலைவர் ஒருவர்,கர்நாடகவில் உள்ள காங்கிரஸ், ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களை சேர்த்துக் கொள்ள விரும்புகிறது எனக் கூறினார்.ஸ்வாதி மாலிவால் விவகாரத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

அவசர நிலையை கொண்டு வந்தவர்களுடனும் ஓபிசி மற்றும் பிற வகுப்பினற்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்களுமான காங்கிரஸுடன் லாலு பிரசாத் கைக்கோர்த்துள்ளார்.

பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத ”இந்தியா” கூட்டணிக்கு பிரதமர் பதவிக்கு எந்த வேட்பாளரும் தகுதி அல்ல.அவர்கள் ஒரு சமூகதினரை திருப்திபடுத்தவும் ஊழல் தலைவர்களை பாதுகாக்கவும் வாரிசு அரசியலை வளர்பதர்காகவும் தேர்தலில் நிற்கிறார்கள்.மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.