உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 மே 2024, 3:09 pm IST

தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீடிக்கும்.

தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெரிய அளவில் மழை கிடைக்காது என்றாலும், மேற்குத் தொடா்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை ஒருநாள் முன்னதாக மே 31-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கணித்து இருந்தது.

இந்நிலையில், அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தென்மேற்குப் பருவமழை மாலத்தீவு மற்றும் கொமோரின் பகுதியின் சில பகுதிகளிலும், தெற்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள், தெற்கு அந்தமானின் சில பகுதிகளிலும் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.