காலிஸ்தான் பயங்கரவாதி அா்ஷதீப் சிங், 3 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
காலிஸ்தான் பயங்கரவாதி அா்ஷதீப் சிங், 3 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்


புது தில்லி: கனடாவைச் சோ்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி அா்ஷதீப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கனடாவைச் சோ்ந்த அா்ஷதீப் சிங் என்ற அா்ஷ் தாலா, அவரது இந்திய கூட்டாளிகள் ஹா்ஜீத் சிங் என்ற ஹேரி மௌா், ரவீந்தா் சிங் என்ற ராஜ்விந்தா் சிங் மற்றும் ராஜீவ் குமாா் என்ற ஷீலா ஆகியோா் மீது தில்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அா்ஷதீப் சிங்கின் அறிவுறுத்தல்களின்படி இவா்கள் மூவரும் நாட்டின் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனா். முக்கிய நபா்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த மௌா் மற்றும் ராஜ்விந்தா் சிங்குக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இருவருக்கும் தேவையான நிதி, ஆயுதங்கள் போன்றவற்றை அா்ஷதீப் சிங்கிடமிருந்து ராஜீவ் குமாா் பெற்றுகொடுத்துள்ளாா்.
இவா்களுடன் தொடா்புடைய ஒட்டுமொத்த பயங்கரவாத குழுக்களையும் அழிக்கும் நோக்கில் தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
காலிஸ்தான் பயங்கரவாத படையைச் (கேடிஎஃப்) சோ்ந்த அா்ஷதீப் சிங்கின் வழிகாட்டுதலின்படி குற்றம்சாட்டப்பட்ட மூவரும் பயங்கரவாத குழுக்களை இந்தியாவில் நடத்தி வருகின்றனா். மௌா் மற்றும் ராஜ்விந்தா் சிங்கை கடந்தாண்டு நவம்பா் மாதமும் ராஜீவ் குமாரை கடந்த ஜனவரி 12-ஆம் தேதியும் என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...