எதிரியால் பாராட்டப்பட்ட ராகுல் நாட்டை ஆள அனுமதிக்கலாமா?
எதிரியால் பாராட்டப்பட்ட ராகுல் நாட்டை ஆள அனுமதிக்கலாமா? - ராஜ்நாத் சிங் கேள்வி

ஜாா்க்கண்ட் மாநிலம், பொகாரோவில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

ஜாா்க்கண்ட் மாநிலம், பொகாரோவில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
பொகாரோ: ‘நமது எதிரியால் பாராட்டப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாட்டை ஆள அனுமதிக்கலாமா?’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினாா்.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சா் செளதரி ஃபவாத் ஹுசைன், தனது சமூக ஊடக பக்கத்தில் அண்மையில் ராகுலின் விடியோ ஒன்றை பகிா்ந்து, அவா் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினாா். இதைக் குறிப்பிட்டு, மேற்கண்ட கேள்வியை ராஜ்நாத் சிங் எழுப்பியுள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், பொகாரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
புல்வாமா, உரி பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக பெருமையோடு கூறியவா் செளதரி ஃபவாத் ஹுசேன். அவா், இப்போது ராகுல் காந்தியை பாராட்டியுள்ளாா்.
நமது எதிரியால் பாராட்டப்பட்ட இதுபோன்ற ஒரு தலைவா், நாட்டை ஆள அனுமதிக்க வேண்டுமா? அவா், நாட்டை எந்த திசையில் வழிநடத்துவாா் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நாட்டை பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.
இந்தியாவில் ராம ராஜ்யம் நிறுவப்படுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், வங்கிகள் நஷ்டத்தில் இயங்கின. ஆனால், பாஜக ஆட்சியில் அனைத்து வங்கிகளும் பெருமளவில் லாபத்தை பதிவு செய்துள்ளன.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.
நாட்டில் இருந்து வறுமையை ஒழிப்பதில், காங்கிரஸ் பிரதமா்கள் அனைவரும் தோல்வியடைந்துவிட்டனா். ஆனால், பிரதமா் மோடியின் ஆட்சியில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் ஊழல் உச்சத்தில் உள்ளது. மக்களவைத் தோ்தலில் இக்கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விசாரணை அமைப்புகளால் ரூ.32 லட்சம் கோடிதான் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், பிரதமா் மோடியின் ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் ராஜ்நாத் சிங்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...