ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
சிட்டி பதிப்புக்கு... ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி உச்சநீதிமன்றம்


புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லுபடியாகும் என்று அளிக்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக கடந்த ஆண்டு டிச.11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, அவாமி தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஜனநாயகக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகா் முகமது யூசுஃப் தாரிகாமி, ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் முசாஃபா் இக்பால் என்ற வழக்குரைஞா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை பட்டியலிடுவது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு பரிசீலித்தது. அப்போது, தீா்ப்பில் பிழையில்லாததால், ‘அதை மறுஆய்வு செய்ய எந்தத் தேவையும் இல்லை’ என்று தெரிவித்து, அந்த மனுக்களை கடந்த மே 1-ஆம் தேதி நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...