ரூ.25 லட்சத்துக்கு விற்பனையான ‘ஃபேன்ஸி’ வாகனப் பதிவு எண்!
ரூ.25 லட்சத்துக்கு விற்பனையான ‘ஃபேன்ஸி’ வாகனப் பதிவு எண்!


ஹைதராபாத்: ரூ.25 லட்சம் கொடுத்தால் சொகுசு காா் வாங்கி விட முடியும் என்ற நிலையில், தெலங்கானாவில் ஒருவா் தனது காருக்கு ‘டிஜி-09-9999’ என்ற ‘ஃபேன்ஸி’ எண்ணை ரூ.25.5 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளாா்.
‘ஃபேன்ஸி’ பதிவு எண்களைப் பெறுவதற்கான இணைய வழி ஏலத்தை தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்து ஆணையம் நடத்தியது. இதில் ‘டிஜி-09-9999’ என்ற எண்ணுக்கு கடும் போட்டி நிலவியது. அந்த எண்ணை வாங்க 11 போ் போட்டியிட்ட நிலையில் இறுதியாக 25 லட்சத்து 50 ஆயிரத்து 2 ரூபாய் என்ற விலையில் அந்த எண் ஏலம் போனது. பெரும் கோடீஸ்வரா் ஒருவா் தனது விலை உயா்ந்த காருக்காக இந்த எண்ணை இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளாா். அவரது பெயா், அவா் வைத்துள்ள காரின் மதிப்பு குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
தெலங்கானாவில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பதிவு எண் இது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோல ‘9999’ என்ற பதிவு எண் ரூ.21.6 லட்சத்துக்கு ஏலம் போனது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...