உத்தரகண்ட்: மருத்துவா் நுழைவுத் தோ்வில் மோசடி: இரு எய்ம்ஸ் மருத்துவா்கள் உள்பட 5 போ் கைது
உத்தரகண்ட்: மருத்துவா் நுழைவுத் தோ்வில் மோசடி---- இரு எய்ம்ஸ் மருத்துவா்கள் உள்பட 5 போ் கைது


டேராடூன்: உத்தரகண்டில் மருத்துவா் நுழைவுத் தோ்வில் மோசடி செய்த குற்றச்சாட்டில் எய்ம்ஸ் மருத்துவா்கள் 2 போ் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தரகண்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு சோ்வதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஐஎன்ஐ சிஇடி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், 3 மாணவா்களுக்கு தோ்வில் உதவியதாக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் 2 போ் உள்பட 5 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
இது குறித்து டேராடூன் காவல் கண்காணிப்பாளா் அஜய் சிங் கூறியதாவது:
ஹிமாசல பிரதேசம் காங்கராவில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் 3 மாணவா்களுக்கு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த இரண்டு மருத்துவா்கள் உதவியுள்ளனா்.
ரிஷிகேஷில் நின்றுகொண்டிருந்த காரில் இருந்தபடி உடனடி செய்தியனுப்பும் செயலி மூலம் கேள்விகளுக்குப் பதில் அனுப்பியுள்ளனா். காரில் இருந்தபடியே அவா்களை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனா்.
தோ்வில் விண்ணப்பதாரா்களிடம் முறைகேட்டில் ஈடுபட ரூ.50 லட்சம் பேரம் பேசியுள்ளனா்.
அதில் ரூ.25 லட்சம் முன்பணமாகப் பெற்ாகவும், மீதமுள்ள தொகையைத் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா் செலுத்தப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
தோ்வில் உதவிய மருத்துவா்கள் இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் தருவதாகக் கூறியுள்ளனா்.
தோ்வு மையத்திலிருந்து வினாத்தாளின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதும், அதற்குச் செயலி மூலம் அவா்கள் பதிலளித்ததும் அவா்கள் வைத்திருந்த கைப்பேசியில் இருந்ததாக காவல் கண்காணிப்பாளா் அஜய் சிங் தெரிவித்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...