உள் துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தில்லி தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.


மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு மர்ம நபர்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாள்களாகவே பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது. இந்த மிரட்டலால் முழு வீச்சில் தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்படும். தேடுதல் பணிகளுக்குப் பிறகு அத்தகைய மிரட்டல் போலியானவை என கண்டறியப்படும்.
சமீபத்தில் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால், பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் தற்போது உள் துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு தேடுதல் குழுவுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதாகவும், தற்போது வரை (மாலை 6 மணி) சந்தேகப்படும்படி எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...