காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டர்.

மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய அவர்,

400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமையவுள்ளதை 5ஆம் கட்டத் தேர்தல் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு எந்தவகையிலும் பயணளிக்கப்போவதில்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கு வளர்ந்த இந்தியாவை உறுதி செய்யும்.

காங்கிரஸ் கட்சி நாளொன்றுக்கு 12 கிலோமீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைத்தது. பாஜக நாளொன்றுக்கு 30 கிலோமீட்டருக்கு அமைத்தது. 60 ஆண்டுகால ஆட்சியில் 70 விமான நிலையங்களை காங்கிரஸ் உருவாக்கியது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 70 புதிய விமான நிலையங்களை பாஜக கட்டமைத்தது.

60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் 380 மருத்துவக் கல்லூரிகள். பாஜகவின் 10 ஆண்டுகள் ஆட்சியில் 325 மருத்துவக் கல்லூரிகளை கட்டியுள்ளது.

அவர்களின் ஆட்சியில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தற்போது நாட்டில் 22க்கும் அதிகமான எய்ம்ஸ் உள்ளன.

நரேந்திர மோடி
மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

காங்கிரஸ் ஆட்சியில் 25% மக்களுக்கு மட்டுமே குடிநீர் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் 75% வீடுகள் குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன.

உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது. நாடு முழுவதும் 1.25 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஒருலட்சம் கோடிக்கும் மேலான பாதுகாப்பு தளவாட உற்பத்தி நடைபெறுகிறது.

வங்கிகள் ரூ. 3 லட்சம் கோடிக்கும் மேலாக லாபம் ஈட்டுகின்றன.

மேற்கு வங்கத்தில் 2010க்கு பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏனெனில் வாக்கு வங்கிக்காக மாநிலத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஓபிசி சான்றிதழை மம்தா அரசு வழங்குகிறது. மம்தாவின் சந்தர்பவாத அரசியல் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது.

நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை என்கிறது திரிணமூல் காங்கிரஸ். இவர்கள், இஸ்லாமிய வக்ஃபு வாரியங்களுக்கு நிலங்களைக் கொடுத்துவிட்டு மாறாக அவர்களிடமிருந்து வாக்குகளைக் கேட்கின்றனர் என விமர்சித்தார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com