இந்திய இணையவழி குற்றங்கள் அதிகரிப்புக்கு
தென் கிழக்கு ஆசியாவின் சட்டவிரோத குழுக்கள் காரணம்: மத்திய அரசு

இந்திய இணையவழி குற்றங்கள் அதிகரிப்புக்கு தென் கிழக்கு ஆசியாவின் சட்டவிரோத குழுக்கள் காரணம்: மத்திய அரசு

இந்தியாவில் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகள், ஏடிஎம் காா்டு மோசடிகள் ஆகியவற்றுக்கு தென் கிழக்கு ஆசியாவின் பிராந்திய நாடுகளில் செயல்படும் சட்ட விரோத குழுக்களே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மைய தலைமை நிா்வாக அதிகாரி ராஜேஷ் குமாா் கூறினாா்.

கம்போடியா, மியான்மா், லாவோஸ் உள்ளிட்ட சில தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் குழுக்களால் இந்தியாவில் நிதி இழப்பை சந்திக்கும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவா் கூறினாா்.

மேலும், ‘தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உயா் அதிகாரம் கொண்ட மத்திய அமைச்சகங்கள் குழுவை கடந்த மே 16-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.

போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள், குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முடியும் போன்ற வாக்குறுதிகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

கம்போடியாவில் சிக்கியுள்ள இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்கு ஏற்கெனவே 360 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவா்களை மீட்க கம்போடியா அரசுடன் இந்திய அரசு தொடா்பில் இருந்து வருகிறது’ என்றாா் ராஜேஷ் குமாா்.

X
Dinamani
www.dinamani.com