இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மாணவி

இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தந்தை கார்த்திகேயனுடன் காம்யா
தந்தை கார்த்திகேயனுடன் காம்யா(எக்ஸ்)
Published on
Updated on
1 min read

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை இளம்வயதில் ஏறிய இந்திய வீரர் என்ற சாதனையை பதினாறு வயதான காம்யா கார்த்திகேயன் படைத்துள்ளதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கடற்படை அதிகாரியின் மகளான காம்யா மும்பையில் உள்ள கடற்படை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 16 வயது மலையேறும் இளம் இந்தியர் என்ற பெருமையை காம்யா கார்த்திகேயன் பெற்றுள்ளார் என்று டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் ஃபவுண்டேஷன் (டிஎஸ்ஏஎஃப்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அவரது முயற்சியை ஆதரித்த டிஎஸ்ஏஎஃப் தலைவர் சாணக்யா சவுத்ரி கூறுகையில், ''பூமியின் மிக உயரமான சிகரத்தில் ஏறும்போது காம்யாவுடன் அவரது தந்தை இந்திய கடற்படை அதிகாரி கார்த்திகேயன் இருந்தார். சிறுமியும், அவரது தந்தையும் மே 20 அன்று 8848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். இவ்வளவு சிறிய வயதில் காம்யா கார்த்திகேயன் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்ததில் நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறோம். அவரது பயணம் விடாமுயற்சி, அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்" என்றார்.

காம்யா 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார்' விருதைப் பெற்றவர். இந்த விருது சிறந்த குழந்தை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com