ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

ராஜ்கோட் தீ விபத்தைத் தொடர்ந்து வதோதராவில் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டு மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்திருப்பதாவது, நேற்று ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, வதோதராவில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டு மையங்களும் ஆய்வு செய்யப்பட்டன. சோதனை செய்யப்பட்டன. இருப்பினும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டு மையங்களும் பாதுகாப்பாக உள்ளன.

இந்த பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் அனைத்தும் குஜராத் அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் பொழுதுபோக்கு விளையாட்டு மையம் உள்ளது. இங்கு சிறாா்கள் உள்பட ஏராளமானோா் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டுமானம் சரிந்தது.

தீ கொழுந்துவிட்டு எரிந்து அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், நிகழ்விடத்துக்கு தீயணைப்புத் துறையினா் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்து தொடா்பாக ராஜ்கோட் காவல் துறை உதவி ஆணையா் விநாயக் படேல் கூறுகையில், ‘விபத்தில் சிறாா்கள் உள்பட இதுவரை 27 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவா் யாா் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றாா். தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com