ஜூன் 1-ல் இந்தியா கூட்டணி ஆலோசனை: பிரதமர் தேர்வு?

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்.
ஜூன் 1-ல் இந்தியா கூட்டணி ஆலோசனை: பிரதமர் தேர்வு?
ANI

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் ஜூன் 1-ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் சூழலில் யாரை பிரதமராக அறிவிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கவுள்ளனர்.

காங்கிரஸ், சமாஜவாதி, ஆம் ஆத்மி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியின் கீழ் மக்களவைத் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.

6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, தில்லியில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை குறித்தும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பிரதமர் யார் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

ஜூன் 1-ல் இந்தியா கூட்டணி ஆலோசனை: பிரதமர் தேர்வு?
நன்கொடை பத்திரம் ரத்தால் தேர்தலில் கருப்புப் பண ஆதிக்கம்: அமித் ஷா

தொடக்கத்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் விலகி தனியாக தேர்தலை சந்தித்தாலும், ஆட்சி அமைக்கும்போது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமராக்க வேண்டும் என்று ஏற்கெனெவே அரவிந்த் கேஜரிவால் முன்மொழிந்துள்ளார்.

மேலும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்றே நாள்களில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் தில்லியில் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com