மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

மோடியின் ‘பரமாத்மா' கதை ஏன் தெரியுமா? ராகுல் காந்தி

‘நீண்ட பேச்சுகளையும், நாட்டை பிளவுப்படுத்துவதையும் நிறுத்துங்கள்’

ராகுல் காந்தி - -

Published On :

பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரமாத்மா’ கருத்தை விமர்சித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.

தேர்தலுக்கு பிறகு அதானி குறித்து மோடியிடம் அமலாக்கத்துறை விசாரிக்கும்போது சமாளிக்கதான் பரமாத்மா கதையை மோடி கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிகாரில் ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பக்தியார்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

“பிரதமர் மோடியின் ‘பரமாத்மா' கதையை தற்போது ஏன் கூறினார் தெரியுமா? தேர்தலுக்கு பிறகு அதானி குறித்து மோடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரிக்கும் போது, எனக்கு எதுவும் தெரியாது, பரமாத்மாதான் என்னிடம் கேட்டார் என்று கூறுவதற்காகதான்.

நீண்ட பேச்சுகளையும், நாட்டை பிளவுப்படுத்துவதையும் நிறுத்துங்கள். நாட்டின் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளீர்கள் என்பதை நாட்டு மக்களுக்கும், பிகார் மக்களுக்கும் சொல்லுங்கள்.

22 முதல் 25 ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். அவர்களில் அதானி, அம்பானிக்காகதான் 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டுள்ளார்.” என்று விமர்சித்தார்.

கடந்த வாரம் ஒடிஸாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பூமிக்கு தன்னை கடவுள் அனுப்பியதாகவும், தான் பயாலாஜிகளாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதாக தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.