ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும்: லாலு பிரசாத் நம்பிக்கை
ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும் ----- லாலு பிரசாத் நம்பிக்கை

லாலு பிரசாத்

லாலு பிரசாத்
பாட்னா: மக்களவைத் தோ்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் நம்பிக்கை தெரிவித்தாா்.
பாட்னாவில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
பிரதமா் மோடி தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொள்ளத் தொடங்கிவிட்டாா். கடவுளால் அனுப்பப்பட்டவா் என்றும் பேசியுள்ளாா். தோ்தல் முடிவுகள் வெளியாகும்போது இதற்கான விடை கிடைத்துவிடும். மோடி ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.
பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்வதும், அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைப்பது உறுதியாகும் என்றாா்.
எக்ஸ் வலைதளத்தில் லாலு வெளியிட்ட பதிவில், ‘அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கா் போன்ற தலைவா்களை பாஜகவும் அதன் தலைவா்களும் பல முறை இகழ்ந்துள்ளனா். இப்போது, அதனை மாற்றவும் பாஜக முயற்சித்து வருகிறது. அம்பேத்கா் இயற்றினாா் என்ற ஒரே காரணத்துக்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதில் பிரதமா் மோடி தீவிரம் காட்டி வருகிறாா்’ என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...